மாங்காய் மசாலா பப்பட்

செய்முறை

மாங்காய் துண்டுகளை மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். கனமான வாணலியில் மாங்காய் கலவையை கொட்டி கிளறவும். சுண்டும்போது சர்க்கரை சேர்க்கவும். பின்பு நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் மிளகுத்தூள், Chilly Flex, பொடியாக அரிந்த புதினா சேர்த்து கிளறவும். தட்டில் நெய் தடவி மாங்காய் கலவையை மெல்லிய  Layer ஆக பரப்பவும். 3 நாட்கள் வெயிலில் காய விடவும். பின்பு நீளத்துண்டுகளாய் கட் செய்து, தட்டில் இருந்து உரித்துக் கொள்ளவும். சுவையான பப்பட் தயார். இது தயிர் சாதம், காரக் குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Tags :
× RELATED கிராப் மீட் அண்ட ஷ்ரிம்ப் ரோஸ்டெட் கார்லிக் சாஸ்