தண்டை

செய்முறை
 

(தண்டை பேஸ்ட் செய்முறை)

ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி பிஸ்தா, தோல் நீக்கிய பாதாம், கசகசா, மிளகு, ரோஜா இதழ்கள், பெருஞ்சீரகம் ஆகியவற்றை 5 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் ஊறிய பொருட்களை மிக்சியில் தண்ணீருடன் சேர்த்து நன்கு மைய அரைக்கவும். பின் சர்க்கரை, குல்கந்து, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.குடிக்கும் முறை2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் தண்டை பேஸ்டை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு குளிர்ந்த பால் அல்லது பால் சேர்த்து கலந்து ரோஜா இதழ்கள், நறுக்கிய நட்ஸை கொண்டு அலங்கரித்து பரிமாறவும். வேண்டுமெனில் ஐஸ்கட்டி சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஜூஸ் மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. இதை வடஇந்தியாவில் ஹோலி பண்டிகை மற்றும் மகா சிவராத்திரி அன்று செய்வார்கள். இதை நாம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒரு வாரம் வரைக்கும் உபயோகப்படுத்தலாம்.

Tags :
× RELATED டிரை ப்ரூட்ஸ் பொங்கல்