மிக்ஸ்டு வெஜ் இட்லி

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். வதக்கிய கலவையை இட்லி மாவுடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இட்லி தட்டில் கரைத்த வெஜிடபிள் இட்லி மாவைச் சேர்த்து மிருதுவாக வேக வைத்து இறக்கவும். சுவையான தக்காளி (அ) மல்லிச் சட்னியுடன் பேக் செய்து தரவும்.

குறிப்பு

* இட்லி தட்டில் அரைக்கரண்டி மாவைச் சேர்த்து அதன் மேல் வதக்கிய காய்களைச் சேர்க்கவும். வதக்கிய காய் மேல் அரைக்கரண்டி மாவைச் சேர்த்தும் சுவையான மிக்ஸ்டு வெஜ் இட்லியைச் செய்யலாம்.

Tags :
× RELATED காளான் முட்டை மசாலா