சப்பாத்தி சில்லி

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு, பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், சீரகப்பொடி, கரம் மசாலாவைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட் சேர்க்கவும். மிக்ஸியில் சிறு துண்டுகளாக்கியச் சப்பாத்தியைச் சேர்த்து ஒரு சுற்று ஓட்டவும். பொடித்த சப்பாத்தியை வதக்கிய கலவையுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். போதுமான உப்பைச் சேர்த்துப் பிரட்டவும். நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸ் செய்யவும். டொமேடோ சாஸ் (அ) தயிரைச் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிடத் தரவும்.

Tags :
× RELATED காளான் முட்டை மசாலா