புகையால் ஏற்படும் மாசு குறைக்க 3 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த நாகை கலெக்டர்

நாகை: புகையினால் ஏற்படும் மாசு குறைக்க நாகை கலெக்டர் சைக்கிளில் நேற்று அலுவலகம் வந்தார். நாகை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக அரசு அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தங்களது அலுவலகங்களுக்கு சைக்கிளில் வர வேண்டும் என்று கடந்த 5ம் தேதி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், அதிகாரிகள் அனைவரும் சைக்கிளில் வர வேண்டும்.

இல்லாவிட்டால் எலக்ட்ரிக் பைக்கில் வர வேண்டும். நீண்ட தூரத்தில் இருந்து வருபவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். இதன்மூலம் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி, நாகை மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க கலெக்டர் அருண்தம்புராஜ், முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) நெய்தல் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தார். இவரை தொடர்ந்து கலெக்டரின் பாதுகாப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்டோரும் சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.

Related Stories:

More