அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா:அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விமானநிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் ஒருவருக்கு கூட ஓமிக்ரான் பரவல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தான்சானியா, கனடா போன்ற நாடுகளும் அதிக பாதிப்புள்ள ஓமிக்ரான் பரவல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் இனி அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: