வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

வால்பாறை: வால்பாறை நகருக்குள் சிறுத்தைகள் சுதந்திரமாக உலா வரத் துவங்கி உள்ளன. நபர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராவில் தினமும் சிறுத்தை நடமாட்டம்  பதிவாகி வருகிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை வீடியோக்கள் வெளியானாலும் வனத்துறை மீண்டும் கேமரா  வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதில் வரும் சிறுத்தைகள் எலியையும்,  பூனையையும், பெருக்கானையும் வேட்டையாடுவதால் படங்கள் வெளியிடப்படுவதில்லை. இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரி நுழைவு வாயிலில் சிறுத்தை நடமாடிய   வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதை உணர்ந்து வனத்துறை உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: