வருண் சிங் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுள்பெற பிரார்த்திக்கிறேன் :ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “துயரமான ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய கேப்டன் வருன் சிங் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. வருண் சிங் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுள்பெற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories:

More