விவசாயிகளுக்கு நெற்பயிரில் பண்ணைப்பள்ளி பயிற்சி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட தாமரங்கோட்டை தெற்கு கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் நெல் பயிருக்கான வயல்வெளி பள்ளி நடைபெற்றது. பயிற்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சுபத்ரா ராஜேந்திரன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வேளாண்மை அலுவலர் சுதா அனைவரையும் வரவேற்றார். பயிற்சிக்கு முன்னிலை வகித்த வேப்பங்குளம் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் பாபு, நடப்பு சம்பா பருவத்தில் நீண்ட கால நெல் ரகங்கள் சாகுபடி பற்றியும், நடவு செய்யும் முறை, பயிர் பாதுகாப்பு, களைகளை கட்டுப்படுத்தும்முறை, அதிக மகசூல் பெறுவதற்கு பயிர்களுக்கு தேவையான உரங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சை வேளாண்மை துணை இயக்குநர் (எப்டிசி) பாலசரஸ்வதி, நெல் பயிர்களை பாதுகாக்க நன்மை செய்யும் பூச்சிகளை அதிகப்படுத்தவும், வரப்பு ஓரங்களில் உளுந்து சாகுபடி செய்யவும், எலிகளை கட்டுப்படுத்தும் முறை பற்றியும் எடுத்துக் கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராமன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: