ஹெலிகாப்டர் விபத்தில், உயிருடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளதாக தகவல்!!!

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருண் சிங்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்தேவைப்பட்டால், வெலிங்டனில் ராணுவ மருத்துவமனையிலிருந்து பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. வருண் சிங்கை மீட்டபோது விபத்து தொடர்பாக சில தகவல்களை கூறியதாக தகவல் வெளியானது. அவருக்குத்தான் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்ற விவரங்கள் தெரியும். அவருக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து 6 மருத்துவக்குழுவினர் குறிப்பாக பிளாஸ்டிக் சர்ஜரி குழுவினர் சென்று இவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: