குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!!

நீலகிரி : குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் உட்பட  13 பேர் மரணமடைந்தனர். இதனிடையே விபத்து எப்படி நேரிட்டது என்பது தொடர்பான விவரங்களை ஹெலிகாப்டரின் கருப்புபெட்டியில் தான் அறிய முடியும். ஆகவே அந்த கருப்புப்பெட்டியை தேடும் பணி நேற்று முதலே தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குன்னூர் அருகே காட்டேரி நச்சுப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருப்புபெட்டியை பெங்களூர் அல்லது டெல்லி கொண்டுசென்று ஆய்வுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? என்ன உரையாடல் நிகழ்ந்தன? என்ன காரணத்திற்காக  இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது? என்பது குறித்த சேகரிக்கப்பட்ட உள்ளன.

கருப்பு பெட்டி என்றால் என்ன ?

கருப்பு பெட்டியில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று பைலட்கள் பேசியதை பதிவு செய்யும். மற்றொன்று விமானம் எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தது போன்ற தரவுகளை சேமிக்கும் பகுதி. இந்த இரண்டு பகுதியும் கடைசி 2 மணி நேரத்திற்கு பைலட்களுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1,000 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. இதன் நிறம் ஆரஞ்சு.ஆனால் இது கருப்பு பெட்டி என நிலைப்பெற்றுவிட்டது.

Related Stories: