குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் காக்பிட்- ல் அறியலாம் என நிபுணர்கள் தகவல்:

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான முழுமையான காரணம் காக்பிட் எனப்படும் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவான பேச்சுக்கள் மூலம் அறிய முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனனர். இராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து செய்தியாளரிடம் பேசிய முன்னாள் விமானப்படை அதிகாரி டாக்டர். என். விஜயன், அதிநவீன இரண்டு என்ஜின்கள் கொண்ட MI 17 v5- ல் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டால் மற்றொரு என்ஜினை இயக்க முடியும் என்றார். அதேபோல், மேக மூட்டம் அதிகமாக இருந்தாலும் அதனைவிட அதிக உயரத்தில் ஹெலிகாப்டரை இயக்க முடியும் என்று தெரிவித்தார். இருப்பினும் காக்பிட் எனப்படும் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவான பேச்சுக்கள் மூலமே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார். விபத்துக்கான காரணங்கள் குறித்து யூகத்தின் அடிப்படையில் சொல்லமுடியாது என்றும், இராணுவத்தால் அமைக்கப்படும் விசாரணை கமிட்டியின்  அறிக்கையில் தான் முழுமையாக அறியப்படும் என்றும் டாக்டர். என். விஜயன் கூறியுள்ளார்.

மேலும், கருப்பு பெட்டியை ஆய்வு செய்தால் மட்டுமே ஹெலிகாப்டர் விபத்திற்கான உண்மையான காரணத்தை அறியமுடியும் என்று முன்னாள் விமானப்படை அதிகாரி மார்ஷல் மாதேஷ்வரன் கூறியுள்ளார். அதில் இருக்கும் பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார். மோசமான வானிலை அல்லது தொழில்நுட்ப கோளாறால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று அனுமானங்கள் இருந்தாலும் முழுமையான ஆய்வுக்கு பின் இந்திய இராணுவம் அறிக்கை வெளியிடும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: