அனைத்து கோரிக்கையும் ஏற்கும் வரை போராட்டம்: பாரதிய கிசான் சங்க தலைவர் திட்டவட்டம்

புதுடெல்லி: விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என்று பாரதிய கிசான் சங்க தலைவர் குர்நாம் சிங் சாருனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டம் தொடரும். போராட்டத்தை வாபஸ் பெற்றால் அது எங்களுக்கு பிரச்னையாக மாறிவிடும். எங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். அதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தை போன்று உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் வேலைவாய்ப்பு ஒன்றிய அரசு வழங்க  வேண்டும்’ என்றார். விவசாயிகள் குழு உறுப்பினரான அசோக் தவாலே கூறுகையில், ‘அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் சில குறைபாடுகள் இருந்தன. அவற்றை சில திருத்தங்களுடன் அரசுக்கு அனுப்பி பதிலுக்கு காத்திருக்கிறோம்’ என்றார்.

Related Stories:

More