டாஸ்மாக் நேரம் மாற்றம் எதிர்த்து வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்தது. இதை பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம்  சார்பில்  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட  சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு  கொடுக்காமல் தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளது.

இரவு 10 மணி வரை என்பதால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Related Stories: