எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரிசார்ட்டை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரிசார்ட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார். மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் எம்பியுமான திமுகவை சேர்ந்த ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரிசார்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரம் வந்து, கால்டன் சமுத்திரா ரிசார்ட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். இதில், திமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: