ரூ.1.57 கோடியில் அரசு கட்டிடங்கள் திறப்பு: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர்  ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை க.சுந்தர் எம்ஏல்ஏ திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர், திணையாம்பூண்டி, சித்தனக்காவூர் ஆகிய கிராமங்களில், ஊராட்சி மன்ற கட்டிடங்கள், பென்னலூர், கட்டியாம்பந்தல், மலையங்குளம், பழவேரி, பினாயூர், சித்தனக்காவூர் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், ஆதம்பாக்கம்  மற்றும் மதூர் கிராமங்களில் பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 57 லட்சத்தில் கட்டப்பட்டன. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணை தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சேஷாத்ரி, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில், மாவட்ட குழு உறுப்பினர் பத்மா பாபு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: