5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளிப்பெருமாள் கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தெப்பத் திருவிழா நடந்தது. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடப்பது வழக்கம். மழையின்மை காரணமாக கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு தெப்பத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு பெய்த கனமழையால், விளக்கொளி பெருமாள் கோயில் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையொட்டி, தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப்பெருமாள், மரகதவல்லி தாயார், தேசிகன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து சிறப்பு அலங்காரத்தில், தெப்பத்தில் 7 சுற்று வலம் வந்தனர். இதையொட்டி வாண வேடிக்கைகளும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் உள்பட பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: