லேப்டாப்களை திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது

திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த குத்தம்பக்கத்தில் தனியார் கொரியர் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இந்த தொழிற்சாலையில் சஞ்சய்மேனன் (56) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் லேப்டாப்கள் அதிகமாக இருந்தது. இந்நிலையில் லேப்டாப்களின் எண்ணிக்கை குறைந்து வரவே லேப்டாப்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்படி போலீசார் விசாரித்து வந்தனர். இதே தொழிற்சாலையில் பணியாற்றிவரும் பாப்பன்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அகில் முரளி (24), கீழ்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (34) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2 பேரும் லேப்டாப்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories:

More