இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு நாடகம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் சின்ன சோழியம்பாக்கம், பெரிய சோழியம்பாக்கம், ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் நேற்று இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்வியின் அவசியம் குறித்தும், கல்வி தரும் நன்மை குறித்தும், கல்வி இடைநிற்றலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கலை குழுவினர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். மேலும், கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி குழந்தைகள் படிக்க முடியவில்லை. இதனால் அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, ஒவ்வொரு கிராமத்திலும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவும் விவரத்தை ஆன்லைன் மூலமாகவோ, தலைமையாசிரியர் மூலமாகவோ விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு சில சலுகைகள் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் அப்பகுதி குழந்தைகள் கல்வி கற்கமுடியும் என கலைக்குழு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: