பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை

திருவனந்தபுரம்: சபரிமலையில்  தற்போது மணடல கால பூஜைகள் நடந்து வருகின்றன. தினமும் 50 ஆயிரம் பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் வரை இதில் பாதிக்கும்  குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்தனர். இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு  நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இந்த 2 நாட்களிலும்  மட்டுமே 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. காலை வரை  45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன் பதிவு செய்திருந்தனர். இதனால்  காலையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகை  அதிகரித்த வண்ணம் இருந்தது. சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் முழங்க, பல  மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

Related Stories: