ஜிடிபி 9.5 சதவீதமாக இருக்கும் குறுகியகால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி தொடர்ந்து 9வது முறையாக, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை, நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, கடன் வட்டி உட்பட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான நிதிக் கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை, கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார்.

இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 9வது முறையாக, இது 4 சதவீதமாகவே நீடிக்கிறது. நிதிக்கொள்கை கூட்டத்தில் பங்றே்ற 6 பேரில் 5 பேர் வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர ஆதரவு அளித்துள்ளனர். இதுபோல், ரிசர்வ்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக தொடர்கிறது. காலப்போக்கில், தேவைக்கு ஏற்ப வட்டி விகித மாற்றம் பற்றி முடிவு செய்யப்படும். கொரோனாவால் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியில் இருந்து, இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது. இது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதாக அமையும். சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளதும், பண வீக்கத்தை குறைக்க உதவும். நடப்பு நிதியாண்டில் சில்லறை விலை பண வீக்கம், 5.3% இருக்கும்.

* சாதாரண போனில் யுபிஐ பரிவர்த்தனை

ஸ்மார்ட் போன் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணம் அனுப்பவும், கடைகளில் பொருட்களுக்கு பணம் வழங்கவும் யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண போன் வைத்திருப்பவர்களுக்கும் இந்த வசதியை கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாதாரண போன்களில் யுபிஐ பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான சாப்ட்வேரை உருவாக்க கில்டு ரீடெய்ல் ஐபிஓ வெளியிட்டு நிதி திரட்டுவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் ஜன.1 முதல் உயர்வு

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் உயர்கிறது. வங்கி வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து மாதம் 3 முறையும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணமாக ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. தற்போது இது ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.உருவாக்க கில்டு ரீடெய்ல் ஐபிஓ வெளியிட்டு நிதி திரட்டுவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: