சில்லி பாயின்ட்...

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில், இந்தியாவின் ஆர்.அஷ்வின் (360 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (382) முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சு தரவரிசையிலும் அஷ்வின் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* பிரேசில் கால்பந்து நட்சத்திரம் பீலே (81 வயது), உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 12 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

Related Stories:

More