விஜய் ஹசாரே டிராபி மும்பையை வீழ்த்தியது தமிழகம்

தும்பா: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் 54 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தியது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை பீல்டிங் செய்ய, தமிழகம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன் குவித்தது. ஷாருக் 66 (35 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), இந்திரஜித் 45, சுந்தர் 34, கார்த்திக் 32,  கவுசிக் 31, சாய் சுதர்சன் 24 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய மும்ப 46.4 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷாம்ஸ் முலானி 75, சாய்ராஜ் பாடீல் 42, ஹர்திக் தமோரே 28 ரன் எடுத்தனர். தமிழக தரப்பில் சித்தார்த்,  சுந்தர் தலா 3, சாய்கிஷோர் 2, சிலம்பரசன், சந்தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தமிழகம் 2வது லீக் ஆட்டத்தில் இன்று கர்நாடகாவுடன் மோதுகிறது.

Related Stories:

More