கோட், உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்திய 2 பேர் கைது

சென்னை: விமானத்தில் கோட், உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமானநிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சென்னையை சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில் ஒரு பயணி தான் அணிந்திருந்த கோட்டில் 8 தங்க பட்டன்களை வைத்து தைத்திருந்தார். இதேபோல், மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பார்சல்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க பட்டன், தங்கப்பசை என மொத்த 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம். பயணிகள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More