மாநகராட்சி ஊழியர் தீக்குளிக்க முயற்சி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் 152 மலேரியா பிரிவு ஒப்பந்த தொழிலாளர்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். முன்னறிவிப்புமின்றி 7 பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில், சமீபத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சேர்ந்த பெண்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. மண்டல நல அலுவலர் இளஞ்செழியனிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதிலளித்ததால், ஆத்திரமடைந்த ஒப்பந்த ஊழியர் தாமஸ் மண்டல அலுவலக வளாகத்தில், நேற்று மாலை, மண்ணெண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். சக ஊழியர்கள் அவரை மீட்டனர்.

Related Stories:

More