மாணவிகள் கூட்டு பலாத்காரம் அரசு பள்ளி முதல்வர், 14 ஆசிரியர் மீது வழக்கு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 மாணவிகள் புகார் கொடுத்ததை அடுத்து பள்ளியின் முதல்வர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான்  மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளில் 4 பேர் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் தங்களை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்து விட்டதாக பிவாடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளின் உதவியுடன் ஆசிரியர்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 2 மாணவிகள் இரட்டையர்கள். அவர்களின் புகாரின் பேரில் ஒரு வழக்கும், பள்ளியில் பயிலும் மேலும் 2 மாணவிகளின் புகாரின் அடிப்படையில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பள்ளியின் முதல்வர் மற்றும் 14 ஆசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More