மின் நுகர்வோரின் தரவுகளை பாதுகாக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:2003ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கிற 1912 என்ற புகார் எண்ணை மின்னகம் என்ற போர்வையில் 94987 94987 என மாற்றுவதற்கான காரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளன. இந்த பிரச்னையில் உடனடியாக முதல்வர் தலையிட்டு மின்னகம் ஒப்பந்தம் குறித்த விவரங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணையத்தில் வெளியிட வேண்டும். 3 கோடிக்கும் அதிகமான மின்நுகர்வோரின் தரவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More