முதுகுளத்தூர் இளைஞர் மரணம் விசாரணை நடத்த பாஜ சார்பில் உண்மை கண்டறியும் குழு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முதுகுளத்தூரில் மணிகண்டன் என்பவர் காவல் துறையின் துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் உண்மை தன்மையை கண்டறிய தமிழக பாஜவின் துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்படுகிறது.  

இந்த குழுவானது சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குழுவில், மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன், மருத்துவ பிரிவு செயலாளர் ராம்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories:

More