×

பிபின் ராவத் மறைவு: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!

டெல்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. விமானப்படையின் டிவிட்டர் பக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணுவ பயிற்சிக் கல்லூரி மாணவர்களுடன் உரையாற்றுவதற்காக தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த விமானப்படை கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தார் வீரர்களுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி இரங்கல்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம், இந்த நேரத்தில் பிபின் ராவத் குடும்பத்துடன் உடன் நிற்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் நிற்கிறோம்; விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கல். இந்த துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா இரங்கல்
பிபின் ராவத்தின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். தாய் நாட்டிற்கு சேவையாற்றிய துணிச்சல் மிக்க வீரர்களில் ஒருவர் பிபின் ராவத் என உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிபின் ராவத்தின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. பிபின் ராவத் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் இரங்கல்
துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார், 11 வீரர்கள் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவரது அகால மரணம் நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Diocese ,Bibin Ravat ,Modi ,Rahul Gandhi ,Rajnath Singh ,Amitsha , Pipin Rawat's death: Leaders including PM Modi, Rahul Gandhi, Rajnath Singh, Amit Shah mourn ..!
× RELATED புனித வியாழனை முன்னிட்டு தஞ்சாவூர்...