×

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் வழக்கு: அமலாக்கத்துறை முன் நடிகை ஆஜர்

புதுடெல்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகம் முன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ெதாடர்பான ரூ. 200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (36) மீதும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் சந்திரசேகர்  மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் ஆகியோருக்கு எதிராக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி மும்பை விமான நிலையம் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற ஜாக்குலினை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின், அவர் தனது வீட்டுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார். தொடர்ந்து இன்று (டிச. 8) டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர், இன்று டெல்லி அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு வந்தார். அவரிடம் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி விவகாரம் தொடர்பாக ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.


Tags : Sukesh Chandrasekhar ,Azhar ,Enforcement Department , Mediator Sukesh Chandrasekhar case: Actress Azhar before the Enforcement Department
× RELATED நாகர்கோவில் கோர்ட்டில் பிரபல...