நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தபின் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தான்  இருக்கும்.தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர்  பேசப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி பவனில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  கலந்து கொண்டு  ராட்சத பலூனை பறக்க விட்டார். இதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் விக்டரி  எம்.மோகன், கொட்டிவாக்கம் முருகன், மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன், எம்.ஜி.ராம்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல திட்டங்கள் சோனியாகாந்தி மூலம் துவக்கப் பட்டது, விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் காங்கிரசின் ஆதரவு அதற்கு முக்கியம் விவசாயிகள் காந்திய வழியில் போராடி மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள். இந்திய விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பெருமை சேர்க்க கூடியது இந்த போராட்டம்.

திமுக ஆட்சி ஆறு மாதம் காலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்த முதல் மாநிலம் தமிழ்நாடு, மோடி பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அதற்கு முன்பாகவே ஸ்டாலின் குறைத்து விட்டார்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தான்  இருக்கும். தொகுதி பங்கீடு குறித்து  தேர்தல் தேதி அறிவித்த பின்னர்  பேசப்படும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Related Stories:

More