விழுப்புரம் அருகே நடந்த கொலை, கொள்ளை வழக்கில் ஒருவர் கைது: 24 மணி நேரத்தில் கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்த போலீஸ்!!!

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே நகைக்காக இரண்டு மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். கண்டமங்கலம் அருகே இருக்கும் கலித்திரம்பட்டு கிராமத்தில்  80 வயது மூதாட்டி சரோஜாவும்,60 வயதான மகள் பூங்காவனமும் தனியாக வசித்து வந்தனர். நள்ளிரவில் வீடு புகுந்து இருவரையும் கொலை செய்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்றனர். அதே கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி பணியாற்றும் தம்பதியினையும் அந்த கும்பல் தாக்கி கொள்ளையடிக்க முயன்றிருக்கிறது. கோவிந்தன் என்பவருடைய வீட்டு கதவையும் தட்டிய கொள்ளையர்கள் கதவை திறக்காததால் அங்கிருந்து சென்றனர்.

அந்த பகுதி மாரியம்மன் கோவில் உண்டியலையும் அவர்கள் உடைத்திருக்கிறார்கள். ஒரே இரவில் நடந்த இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஆறு தனிப்படையை அமைத்து போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்த கவிதாஸ் என்பவர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தனியாக உள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யும்  குரூரமனநிலை கொண்டவர் கவிதாஸ் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

More