×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில்14 பேரில் 13 பேர் உயிரிழப்பு: சடலங்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரம்..!

டெல்லி: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 7 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.


Tags : Gunnur , 13 out of 14 people killed in Coonoor helicopter crash?
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது