டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: ஹர்த்திக் பாண்டியா முடிவு?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா (28) முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அதன்பின்னர் அவரால் பந்துவீச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பற்றி பரிசீலித்து வருகிறார். ஒயிட் பால் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் கவனம் செலுத்த விரும்புவதால் அவர் தனது விருப்பத்தை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. பாண்டியா கடைசியாக 2018ல் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட்டில் விளையாடினார். அதற்குபிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வில்லை. தென்ஆப்ரிக்க தொடரிலும் அவரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More