அத்திக்கோயில் பகுதியில் காட்டு யானைகளால் தென்னை, பலா, வாழைகள் சேதம்-சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே மேற்குதொடா்ச்சி மலை அடிவாரத்தில் கான்சாபுரத்தையடுத்த அத்திக்கோயில் பகுதியில் மா, தென்னை, பலா, தேக்கு, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ளது. இதில் நேற்று முன்தினம் கான்சாபுரம் விவசாயி ராஜ்குமார் தென்னை மரம் ஒன்று, 50 பலா காய்கள், ரத்தினவேல்ச்சாமியின் 3 தென்னை,40 பலாகாய், ராஜேந்திரனின் 5 தென்னை மரம், ராமகிருஷ்ணன் ராஜாவின் தென்னை 1, 100 பலாகாய், அசன் காதருக்கு 30 பலாகாய் உள்பட 200க்கும் மேற்பட்ட பலாகாய்கள், 20 தென்னை மரங்கள், 30 வாழைகள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை 3 காட்டு யானைகள் இரவு நேரங்களில் சேதப்படுத்தி வருகிறது.

யானைகள் கான்சாபுரம் அத்திக்கோயில் சாலையில் சா்வ சாதாரணமாக இரவு நேரங்களில் நடமாடி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் அகழிகள் தோண்டவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் செயல்படுத்தாமல் விட்டு விட்டனர்.

சேதப்படுத்தப்பட்ட மரங்களை வனத்துறையினா் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, மலை அடிவாரப்பகுதியில் சோலார் மின் வேலி அரசு சார்பில் அமைத்துத் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதேபோன்று விவசாயிகளுக்கு வழங்க கூடிய பட்டாசுகளை உடன் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More