ஈரோடு : தொடர் மழை காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளி சந்தையானது வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு தொடர் மழை மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான வியாபாரிகளே வந்திருந்தனர். இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்தும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லரை வியாபாரம் மட்டும் 40 சதவீதம் வரை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.