நகராட்சி சந்தையில் விற்பனைக்காக வெளியூர் மாடுகள் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தைக்கு வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தைநாளின்போது, சுற்றுவட்டார கிராமம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும்  விற்பனைக்காக மாடுகள் அதிகளவு கொண்டுவரப்படுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு ஆந்திரா மாநில மற்றும் பல மாவட்ட பகுதியிலிருந்தும் விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரபட்டிருந்தன.

அதிலும், எருமை மாடுகளே அதிகம் அடங்கியது. சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்ததாலும், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது.

இதில், பசுமாடு ரூ.35 ஆயிரம் வரையிலும், நாட்டு காளை மாடு ரூ.33 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.32 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.15 ஆயிரம் என கடந்த வாரத்தை விட சராசரியாக ரூ.4 ஆயிரம் வரையிலும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் சுமார் ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: