ஐய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம்-வீடியோ வைரல்

வால்பாறை : வால்பாறை ஐய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை நகர பகுதியில் சமீபகாலமாக காட்டுமாடு, யானைகள், கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு நடமாட்டம் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி யானைகள் உணவு தேடி ரேஷன் கடையும், வீடுகளையும் இடித்து சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஐயர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து 40வது கொண்டை ஊசி வளைவு பகுதியை நோக்கி 3 கரடிகள் நடந்து சென்றுள்ளது.

இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  வனத்துறையினர் கூறுகையில், ‘‘வால்பாறை, வில்லோனி, வாட்டர் பால்ஸ் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் காணப்படுகிறது. கரடி தாக்கி பலர் காயமடைந்துள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More