×

தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழறிஞர் புலவர் செ. இராசு அவர்களின் மருத்துவச் செலவிற்கு  உதவிடும் வகையில்  அவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டமைக்கு ரூபாய் 15 இலட்சமும் மற்றும் மறைந்த தமிழறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன் மற்றும் புலவர் இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 இலட்சம் ரூபாய், தமிழறிஞர்கள் திரு. முருகேச பாகவதர் மற்றும் திரு. சங்கரவள்ளி நாயகம் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய், என மொத்தம் 80 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister of Tamil Nadu, MK Stalin, Tamil scholar
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...