வாணியம்பாடி அருகே போலீசார் அதிரடி சோதனை மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் பதுக்கிய ₹10 லட்சம் குட்கா பறிமுதல்-ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் ₹10 லட்சம் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.தமிழகத்தில், குட்கா மற்றும் ஹான்ஸ் ேபாைத பொருட்கள் உற்பத்தி செய்வதற்கோ விற்பனை ெசய்வதற்கோ அரசு தடை விதித்துள்ளது. அப்படியிருந்தும், பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதனால், டிஜிபி உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  புத்துக்கோவில்   பகுதியில் மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் குட்கா மற்றும் ஹான்ஸ் பொருட்களை கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளதாக திருப்பத்தூர் எஸ்பி  பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டார்.

தொடர்ந்து அம்பலூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் புத்துக்கோவில் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புத்துக்கோவில் பாம்பாட்டி வட்டம் பகுதியில் தென்னரசு என்பவருக்கு சொந்தமான மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹10 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் ஹான்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து தென்னரசுைவ கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பூவரசன் என்பவரை அம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More