காய்கறி தோட்டம் அமைக்க 12 வகை காய்கறி விதைகள்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் காய்கறித் தோட்டம் அமைக்க ஊக்குவிப்பதற்காக, ₹15க்கு 12 வகை காய்கறி விதைகளை வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம், கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

இதில் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், பயனாளிகளுக்கு மாடி தோட்ட தளைகளையும், ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக ₹15க்கு, 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, ஊட்ட சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ₹25க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளையும் கலெக்டர் வழங்கினார். திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டத்தின் கீழ் ₹3.38 லட்சம் செலவில் நகரப்பகுதிகளில் ₹900 மதிப்புடைய 6 வகையான காய்கறி விதைகள், 6 எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், 6 எண்ணிக்கையிலான இரண்டு கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி. 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகள் ₹225 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக, தர்மபுரி மாவட்டத்தில் 500 எண்ணிக்கைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதன் முறையாக தர்மபுரி நகராட்சி மற்றும் அரூர் பேரூராட்சி ஆகிய 2 நகரப்பகுதிகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, ₹2.03 லட்சம் செலவில் ₹15க்கு கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சின்ன வெங்காயம், கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக, தர்மபுரி மாவட்டத்தில் 4,500 எண்ணிக்கைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/

Related Stories: