அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும்: விவசாய சங்க தலைவர் அறிவிப்பு

டெல்லி: அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும் என விவசாய சங்க தலைவர் குர்நாம் சிங் கூறியுள்ளார். விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெரும் முன் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாகும் என குர்நாம் சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டு என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்கு பின் தெரிவித்தனர்.

Related Stories: