குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வீடு வீடாக விழிப்புணர்வு-மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாது,தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து பொதுமக்களிடமும் போலீஸ் அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாலியல் குற்றங்கள் தொடர்பாக பிரச்சினைகள் வந்தால் உடனடியாக பெற்றோர்கள் இடத்திலும் ஆசிரியர்கள் இடத்திலும் அல்லது போலீஸ் அதிகாரிகள் இடத்திலும் பிரச்சனைகளை கூற வேண்டும்மேலும் தற்போது இளம் வயதில் உள்ளவர்கள் மத்தியில் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வரத்தான் செய்யும். நவீன அறிவியல் உலகத்தில் இளம் வயது பெண்கள் குழந்தைகள் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ராணியார் பள்ளியின் முதல்வர் தமிழரசி, புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், ராணியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் 350 பேர்கலந்து கொண்டனர்.

Related Stories: