கிருஷ்ணராயபுரம் அருகே குப்புரெட்டிப்பட்டியில் பள்ளியில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலம் அகற்றம்

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அருகே குப்புரெட்டிப்பட்டியில் பள்ளியில் தேங்கி இருந்த மழை நீர் தினகரன் செய்தி எதிரொலியாக மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்புரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த வாரம் பெய்த மழையில் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருவதில் சிரமம் இருந்து வந்தது.

இதுகுறித்து நேற்று டிசம்பர் 7ம் தேதி தினகரன் நாளிதழில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை செய்தி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை மாணவ. மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ வழக்கறிஞர். சிவகாமசுந்தரி சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களை சமரசம் செய்து உடனடியாக மோட்டார் வைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றப்பட்டது. இனிமேல் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அப்போது பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரவேலன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அசாருதீன், கிருஷ்ணராயபுரம் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் லாலாப்பேட்டை போலீசார் உடன் இருந்தனர்.

Related Stories:

More