×

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தென் ஆப்ரிக்க அணி அறிவிப்பு: ஆலிவியருக்கு மீண்டும் வாய்ப்பு

ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் டுவேன் ஆலிவியர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டீன் எல்கர் தலைமையிலான அணியில் மொத்தம் 21 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.வேகப் பந்துவீச்சாளர் சிசந்தா மகாளா, முன்வரிசை பேட்ஸ்மேன் ரியான் ரிக்கெல்டன் இருவரும் புதுமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வலது கை வேகப் பந்துவீச்சாளர் டுவேன் ஆலிவியர் (29 வயது), 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இதுவரை 10 டெஸ்டில் விளையாடியுள்ள ஆலிவியர் 48 விக்கெட் (சிறப்பு: 6/37) வீழ்த்தியுள்ளார். ஸ்பின்னர் பிரேனளன் சுப்ராயனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் டிச. 26ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் ஜோக்கன்னஸ்பர்கிலும் (ஜன. 3-7), 3வது டெஸ்ட் கேப் டவுனிலும் (ஜன. 11-15) நடைபெற உள்ளன.தென் ஆப்ரிக்கா டெஸ்ட் அணி: டீன் எல்கர் (கேப்டன்), தெம்பா பவுமா (துணை கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), காகிசோ ரபாடா, வாண் டெர் டஸன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், அன்ரிச் நோர்ட்ஜ், கீகன் பீட்டர்சன், சரெல் எர்வீ, கைல் வெரினி, மார்கோ ஜான்சென், கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம். லுங்கி என்ஜிடி, டுவேன் ஆலிவியர், கிளென்டன் ஸ்டுர்மேன், பிரேனளன் சுப்ராயன், சிசந்தா மகாளா, ரியான் ரிக்கெல்டன்.

Tags : African ,India ,Olivier , Test series with India South African team announcement: to Olivier Opportunity again
× RELATED 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி...