மகளிர் டென்னிசுக்கு சீனாவில் சிக்கல்

நட்சத்திர வீராங்கனை பெங் சூயி,  சீனாவின் முன்னாள் துணை அதிபர் சாங்  காவுலி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதன் பிறகு  அவர் இருக்கும் இடம் கேள்விக்குறியானது. சூயி உயிருடன் இருப்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி செய்துள்ளது. இந்த சர்ச்சைக்கிடையே, மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ)  2022ம் ஆண்டுக்கான  போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது. முதல் 6 மாதங்களுக்கான அட்டவணையில்  தோஹா, இந்தியன் வெல்ஸ், மயாமி, மாட்ரிட், ரோம் ஓபன் டென்னிஸ் தொடர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் சீனாவில் நடைபெற வேண்டிய ‘சென்ஷென் ஓபன்’ டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை இடம் பெறவில்லை.

ஐசிசி விருது யாருக்கு?

நவம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருது பெறுவதற்கான வீரர்களாக  பரிசீலிக்கப்பட்ட  டேவிட் வார்னர் (ஆஸ்திரலேியா),  அபித் அலி (பாகிஸ்தான்), டிம் சவுத்தீ (நியூசிலாந்து) ஆகியோரில் ஒருவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என ஐசிசி அறிவித்துள்ளது.

Related Stories:

More