முதல் டெஸ்டில் ஆண்டர்சன் விலகல்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இங்கிலாந்து அணி, பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.  மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் இந்த இரு அணிகளுக்கு இடையே  நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட்  இன்று காலை  பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்குகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணியும் வெற்றிக்காக வரிந்து கட்ட உள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (39) இன்று தொடங்கும் முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கூடவே, ‘ஆண்டர்சன் உடற்தகுதியுடன் இல்லை’ என்றும் கூறியுள்ளது. அவர் நேரடியாக டிச.16ம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்ள பகல்/இரவு டெஸ்ட் ஆட்டத்தில்  பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.இங்கிலாந்துக்காக இதுவரை 145 டெஸ்டில் விளையாடி உள்ள ஆண்டர்சன்  632 விக்கெட் வீழத்தியுள்ளார். உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 3வது இடத்தில் ஆண்டர்சன் இருக்கிறார். முதல் டெஸ்ட்  போட்டியில் அவர் விளையாடாதது, ஆஸி. அணிக்கு சாதகமாக அமையலாம்.

Related Stories:

More