2 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

சென்னை: நசரத்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள இருளர் குட்டையை சுற்றியுள்ள 40 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து, கடைகள், வீடு கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு வீடு, 11 கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுகவினர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹2 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More