லத்தூர் ஒன்றிய குழு தலைவராக திமுக கவுன்சிலர் சுபலட்சுமி பதவியேற்பு

செய்யூர்:  தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தொடர்ந்து  அக்டோபர் 22ம் தேதி ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, லத்தூர் ஒன்றியத்தில் குளறுபடி காரணமாக தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 29ம் தேதி லத்தூர் ஒன்றியத்தில், ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட சுபலட்சுமி பாபு வெற்றி பெற்றார். அதற்கான பதவியேற்பு விழா லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, ஜெயபால் ஆகியோர் சுபலட்சுமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

பின்னர் அவர், கோப்புகளில் கையெழுத்திட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர் தசரதன், பொதுக்குழு உறுப்பினர் புதுப்பட்டு மோகன், கலை இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் குப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய பொருளாளர் ரங்கநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மன் உள்பட பலர் அவருக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

More