21 பேருக்கு வீட்டு மனை

திருத்தணி: திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அத்திப்பட்டு, வியாசபுரம், எல்விபுரம், மணவூர் ஆகிய கிராமத்தில் வசிக்கும் பயனாளிகள் 21 பேருக்கு  `உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமை வகித்தார்.

முன்னதாக திருத்தணி வட்டாட்சியர் ஜெபராணி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு 21 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், திருவலங்காடு வருவாய் ஆய்வாளர் நதியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More